India - Sri Lanka Pride of Education நிகழ்வில் சிறந்த ஆய்வாளருக்கான விருது -(photoes)

ஆசிரியர் - Editor III
India - Sri Lanka Pride of Education நிகழ்வில் சிறந்த ஆய்வாளருக்கான விருது -(photoes)

India - Sri Lanka Pride of Education நிகழ்வில் சிறந்த ஆய்வாளருக்கான விருது 

இந்தியாவின் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும், இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகமும் இணைந்து அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்திருந்த India - Sri Lanka Pride of Education நிகழ்வில் Best Researcher இற்கான விருதினை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி  எஃப். எச். ஏ. ஷிப்லி பெற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக பல்துறை ஆராய்ச்சிக்கான நிலையம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அத்துடன் இந்தியாவின் ஈ.எஸ்.என் பதிப்பகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த "நாளைய சவால்களுக்கான நிலைத்திருக்கும் தன்மை, புத்தாக்கம், இடைநிலை ஆராய்ச்சி" என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு  கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது. 

இதன் போது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் கலாநிதி பி.நாக சுப்ரமணியன் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் ஆகியோர்களிடமிருந்து இவ்விருதினை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி எஃப். எச். ஏ. ஷிப்லி பெற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் இலங்கை மற்றும் இந்திய ஆய்வுத் துறைகளுக்கு அதிக பங்களிப்புகள் வழங்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர்களுக்கு India - Sri Lanka Pride of Education விருதுகள் வழங்கிகௌரவிக்கப்பட்டதுடன்  இம்மாநாட்டுக்காக இலங்கை, இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து 162 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்துடன், அவற்றில் 138 கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு