மாணவர்களுக்கான சீசன் டிக்கட் ரத்து- நாடாளுமன்றத்தில் சஜித் கொந்தளிப்பு.

ஆசிரியர் - Editor IV
மாணவர்களுக்கான சீசன் டிக்கட் ரத்து- நாடாளுமன்றத்தில் சஜித் கொந்தளிப்பு.

பாடசாலை மாணவர்களின் சீசன் டிக்கட் இரத்துச் செய்யப்பட்ட விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாரளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.     

ஜனவரி மாதம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சீசன் சீட்டுக்களின் செல்லுபடித் தன்மையை உடனடியாக இரத்துச் செய்ய இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் தீர்மானித்துள்ளார் என்றும், ஜனவரி 8 ஆம் திகதி போக்குவரத்து சபைக்கு 66 ஆண்டுகள் பூர்த்தியாகும் இச் சந்தர்ப்பத்தில், இவ்வாறான செயல் மூலம் பிள்ளைகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விடுமுறை ஒரு மாதமாக இருந்தாலும், பிள்ளைகளுக்கு மேலதி வகுப்புகள் நடப்பதாவும், இந்த புதிய விதிமுறையின் மூலம் வார இறுதி நாட்களில் சீசன் டிக்கெட்டுகளை பயன்படுத்துவதற்குக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை கூட நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்வது தவறு என்பதால், இரத்துச் செய்யப்பட்ட சீசன் டிக்கெட்டுகளை செல்லுபடியாக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கோரிக்கை விடுத்தார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு