நாட்டையும் கட்சியையும் பாதுகாக்கும் சவாலை ஏற்க தயார்! - நாமல் அறிவிப்பு.
நாட்டையும் கட்சியையும் பாதுகாக்கும் சவாலை ஏற்க தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ச மட்டுமல்ல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தயாராக இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்த சவாலை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து விரிவாக கலந்துரையாடவுள்ளதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் எந்தவொரு தேர்தலுக்கும் தாம் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளம் அரசியல் தலைவர் ஒருவர் முதிர்ச்சியடைவதற்கு இது சிறந்த சந்தர்ப்பம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தற்போது பலமான அரசியல் சக்தியாக மீண்டும் உறுதிப்படுத்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.