சட்டத்தரணிகளுக்கான உலககிண்ண கிரிக்கெட் போட்டி!! -இலங்கை தேசிய அணிக்கு தேர்வான யாழ் சட்டத்தரணி-

ஆசிரியர் - Editor II
சட்டத்தரணிகளுக்கான உலககிண்ண கிரிக்கெட் போட்டி!! -இலங்கை தேசிய அணிக்கு தேர்வான யாழ் சட்டத்தரணி-

சட்டத்தரணிகளுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை தேசிய அணி சார்பாக விளையாடுவதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனிஷ்ட சட்டத்தரணி தர்மகுலசிங்கம் அஞ்சனன்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பத்து நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்குபற்றும்  சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று கொழும்புபில் ஆரம்பமானது. இப் போட்டியில் எதிர்வரும் ஜனவரி மாதம்  6 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இத்தொடரில் இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்த அணிகள் மோதவுள்ளன.

இப்போட்டியில் இலங்கை சட்டத்தரணிகள் தேசிய அணியில் விளையாட இளம் சட்டத்தரணி தர்மகுலசிங்கம் அஞ்சனன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு