இன்றைய ராசிபலன் 23/12/2023, கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்...

ஆசிரியர் - Editor I
இன்றைய ராசிபலன் 23/12/2023, கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்...

இன்றைய  பஞ்சாங்கம்

23-12-2023, மார்கழி 07, சனிக்கிழமை, ஏகாதசி திதி காலை 07.12 வரை பின்பு துவாதசி திதி பின்இரவு 06.24 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. பரணி நட்சத்திரம் இரவு 09.19 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். வைகுண்ட ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. 

இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் -  23.12.2023

மேஷம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக அனுகூலப் பலன் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பலன்கள் கிட்டும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.

ரிஷபம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனமாக செயல்படுவது நல்லது.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் சேரும். 

கடகம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற அனுகூலப் பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கொடுத்த கடன் வசூலாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

சிம்மம்

இன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பர்.

கன்னி

இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பயணங்களை தவிர்க்கவும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். நண்பர்களின் உதவியால் பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் எதிர்பாராத வகையில் சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தில் பெண்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. 

கும்பம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவு ஏற்படும். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். தெய்வ வழிபாடு நல்லது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு