நிலவில் கூட்டு ஆர்கானிக் மூலக்கூறுகள் : நாசா.!

ஆசிரியர் - Editor II
நிலவில் கூட்டு ஆர்கானிக் மூலக்கூறுகள் : நாசா.!

சனிக்கிரகத்திற்குப் பல நிலவுகள் உள்ளன. அவற்றுள் ஆறாவது பெரிய நிலவு என்ஸ்லேடஸ் (Enceladus) என்பதாகும். இந்நிலவு 314 மைல் (505 கி்.மீட்டர்) விட்டமுடையது. இது குளிர் நிலவாகும் (icy moon). இந்நிலவில் மிகப்பெரிய வலுவான கூட்டு ஆர்கானிக் மூலக்கூறுகள் இருப்பது நாசாவின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. நாசா சனிக்கிரகத்துக்கு அனுப்பி வைத்த காசினி விண்வெளி ஓடம் (Cassini spacecraft) இதனைக் கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் இக்கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சனி கிரகத்தை ஆராய்வதற்காக நாசாவால் அனுப்பப்பட்ட விண்கலம்தான் காசினி (Cassini) விண்கலம் ஆகும். இதற்கு முன்னர் காசினி விண்கலம் இதே போன்ற ஆர்கானிக் மூலக்கூறினை என்சிலேடஸ் நிலவில் இருந்து கண்டுபிடித்தது. அது மிகவும் சிறிய அளவில் இருந்தது.

 வெப்பத் துளைகள்

"நிலவில், தாதுப் பொருட்களுடன் இணைந்த சக்தி வாய்ந்த நீர்ம வெப்பத் துளைகள் இருப்பதை ஆய்வுகள் உணா்த்துகின்றன. இத்துளைகளின் வழியே கரிமப் பொருட்கள், உறைகடலின் மிகப் பெரும் மேற் பரப்பில் இருந்து நீராவியாகவும் பனிச் துகள்களாகவும் விண் வெளியை நோக்கி வெளிவருகின்றன." என்கின்றனர், ஜெர்மனியில் உள்ள ஹெய்டல்பெர்க் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஃபிராங்க் போஸ்ட்பொ்க் தலைமையிலான ஆய்வாளர்கள்.

 நீர்ம வெப்பத்தின் மூலமாகத் தோன்றியிருக்கலாம்

நீர்ம வெப்பச் செயல்பாடுகளால் வெளிவரும் பெரும் மூலக்கூறுகள் நிலவின் மையப் பகுதியில் கூட்டிணைவு வேதியியலைத் தூண்டுகின்றன. "நாம் கண்டுள்ள பகுதிப் பொருட்கள் நீர்ம வெப்பத்தின் மூலமாகத் தோன்றியிருக்கலாம். இது மிகுந்த காற்றழுத்தம் மற்றும் வெப்ப நிலையின் காரணமாக நிகழ்கிறது. இதன் காரணமாக கூட்டு ஆர்கானிக் மூலக் கூறுகள் தோன்றுகின்றன." என்கிறார், ஃபிராங்க் போஸ்ட்பொ்க்.

என்சிலேடஸ் நிலவில்

என்சிலேடஸ் நிலவில் காணப்படுகின்ற காற்றுக் குமிழ்கள் கடலின் ஆழத்திலிருந்து எழும்பி வருகின்றன. இது ஆழமான பகுதியில் உள்ள ஆர்கானிக் பொருட்களை எடுத்து வருகின்றன. அவை, கடலின் மேற்பரப்பு, துளைகளின் வெடிப்பு, நிலவின் உட்பகுதி, பனிமூட்டத்தின் அடிப்பகுதி ஆகியவற்றில் மெல்லிய படலத்தை உருவாக்குகின்றன.

 காசினி

காற்றுக் குமிழ்கள் கடலின் மேற்பரப்பை நெருங்கும் பொழுது வெடிக்கின்றன அல்லது கரிமப் பொருள்களாக சிதைவுறுகின்றன என்பது காசினி (Cassini) விண்கலம் அனுப்பிய தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.

நூற்றுக் கணக்கான அணுக்கள்

நூற்றுக் கணக்கான அணுக்கள் ஒன்றிணைந்து உருவாகின்ற கூட்டு மூலக்கூறுகள் பூமியைத் தவிர வேறு இடங்களில் காண்பது மிகவும் அரிதான செயல். நீர்மம் மற்றும் நீர்ம வெப்பச் செயல்பாடோடு இணைந்த மிகப் பெரிய மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, என்சிலேடஸில் (Enceladus) உள்ள கடலில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்னும் கருத்துக்கு வலிமை ஊட்டுவதாக அமைந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு