மீண்டும் தளபதியை சீண்டிய ரஜினி!! -வேட்டையன் டீசரில் நடந்த சம்பவம்-
சூப்பஸ்டார் - தளபதி ஆகியோருக்கு இடையிலான காக்கா - கழுகு சர்ச்சையை தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.
குறிப்பாக கழுகு உயரமாக பறக்கும், அதற்கு ஈடாக காக்கா பறந்து முயற்சித்து கொத்த வரும், ஆனால் கழுகு அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் மேலே பறக்கும் என சூப்பஸ்டார் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசி இருந்தார்.
காக்கா என தளபதியை தான் ரஜினி குறிப்பிடுகிறார் என பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின் லியோ பட வெற்றி விழாவில் தளபதியும் 'காக்கா-கழுகு' என குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது, ஆனாலும் தளபதி இறுதியில் 'ஒரே உலகநாயகன்.. ஒரே சூப்பர்ஸ்டார்.. ஒரே தல.. எனக்கு ரசிகர்கள் கொடுத்த தளபதி பட்டம் போதும்' என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் தற்போது சூபஸ்டாரின் அடுத்த படமான வேட்டையன் படத்தின் டீஸர் வெளிவந்து இருக்கிறது. அதில் 'குறி வெச்சா இரை விழணும்' என சூப்பஸ்டார் பேசும்போது பின்னணியின் கழுகு பி.ஜி.என் (b.g.m) வருகிறது.
இது மீண்டும் காக்கா - கழுகு சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது. இதை வைத்து மீண்டும் ட்விட்டரில் வாக்குவாதம் எழுந்துள்ளது.