தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர் யார்? இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் களத்தில்...

ஆசிரியர் - Editor I
தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர் யார்? இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் களத்தில்...

தமிழரசு கட்சி தலைமைக்கு இருவர் போட்டியிடுகிறார்கள் என்று சொல்வது தவறு. பலருடைய பெயர் முன்மொழிய படுகிறது. அது கட்சி அடிப்படை உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கூடி வாக்களித்து அதை தீர்மானிப்பார்கள். 

மிகவும் ஆரோக்கியமான ஒரு விஷயமாக நான் அதனை கருதுகிறேன். எவர் வெற்றி பெற்றாலும் மற்றவர்கள் தொடர்ந்து இணைந்து கட்சி அங்கத்தவர்களாக நாங்கள் செயல்படுவோம் என  ஜனாதிபதி சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மன்னாரில் நேற்று வெள்ளிக்கிழமை (1) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது எங்களுடைய கட்சியின் யாப்பின் அடிப்படையிலே தலைமை பதவிக்கு சிலருடைய பெயரை ஒரு குறித்த முறையிலே கட்சி உறுப்பினர்கள் பிரேரிக்கலாம். அப்படியாக இவருடைய பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது.   எங்களுடைய சம்மதத்தோடு தான்.

ஆனால் மற்றவர்கள் தான் எங்களுடைய பேரை பிரேரித்திருக் கிறார்கள். அப்படியாக ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் பிரேரிதிக்கப்படுகிற போது எங்களுடைய யாப்பிலேயே அது எப்படியாக அந்த தெரிவு நடைபெற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஜனநாயக கட்சி என்ற அடிப்படையிலே ஜனநாயகத்திலே பரிநாம  வளர்ச்சியடைந்தோர், முதிர்ச்சி அடைகிற நிலையிலே ஒரு தலைமை பதவிக்கு பலர் தகுதி உடையவர்களாக இருப்பது அந்த கட்சியினுடைய ஒரு பலமான விடயம்.  

பல கட்சிகளுக்கு இவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்று வாழ்நாள் தலைவர்களே வைத்துக் கொண்டுள்ள கட்சிகளைப் போல் அல்லாது எங்களுடைய கட்சியிலே பலருக்கு அந்த தகுதி இருக்கிறது.

பலருடைய பெயர் முன்மொழிய படுகிறது. அது கட்சி அடிப்படை உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கூடி வாக்களித்து அதை தீர்மானிப்பார்கள். 

மிகவும் ஆரோக்கியமான ஒரு விஷயமாக நான் அதனை கருதுகிறேன்.எவர் வெற்றி பெற்றாலும் மற்றவர்கள் தொடர்ந்து இணைந்து கட்சி அங்கத்தவர்களாக நாங்கள் செயல்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு