உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுக்கும் மஹிந்த!

ஆசிரியர் - Admin
உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுக்கும் மஹிந்த!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டமைக்கு தானும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலருமே பொறுப்பு என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.     

புதன்கிழமை இரவு கண்டிக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி, தனது பிறந்த நாளான இன்று பகல் தூபிக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது, நிதி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரத்தின் முறைகேடுகளுக்கு காரணமானவர்களுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்களில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டனர்.

அந்தக் கேள்விக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, தீர்ப்பை ஏற்கப் போவதில்லை என்றும், அதற்கான காரணங்களைத் தெரிவிக்க நீதிமன்றம் வாய்ப்பு அளிக்கும் போது விளக்கமளிப்பேன் என்றும் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு