SuperTopAds

வாய்மூல ஆதாரங்களை நீதிமன்றம் கோரவில்லை!- என்கிறார் நாமல்.

ஆசிரியர் - Admin
வாய்மூல ஆதாரங்களை நீதிமன்றம் கோரவில்லை!- என்கிறார் நாமல்.

ஸ்ரீலங்காக பொதுஜன பெரமுன எப்போதும் நீதித்துறையை மதித்து வந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்களே காரணம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே நாமல் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.     

நீதித்துறை எழுத்துமூல ஆதாரங்களை மாத்திரம் ஆராய்ந்துள்ளது வாய் மூல ஆதாரங்கள் கோரப்படவில்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்வதற்கான சிறந்த இடம் நாடாளுமன்றமே இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றம் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு அனைத்து விடயங்களையும் ஆராய்வதற்கான ஆதாரங்களை கோரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.