சச்சினின் 20 வருட சாதனையை உடைத்து தலை வணங்கிய கோலி!! -4 புதிய உலக சாதனையும் படைப்பு-

ஆசிரியர் - Editor II
சச்சினின் 20 வருட சாதனையை உடைத்து தலை வணங்கிய கோலி!! -4 புதிய உலக சாதனையும் படைப்பு-

ஐ.சி.சி உலகக் கிண்ண 2023 கிரிக்கெட் தொடரில் இன்று மும்பையில் நடைபெற்றுவரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

இல்போட்டியில் நாணய சுழற்ச்சியில் வென்ற இந்திய முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு அதிரடியாக விளையாடிய ரோஹித் நல்ல ஆரம்பத்தை கொடுத்தார். குறிப்பாக 4 பவுண்டரி 4 சிக்சருடன் அதிரடியாக 47 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்த அவருக்கு பின் வந்த கோலியும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். 

மறுபுறம் தம்முடைய பங்கிற்கு மிகச் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் அரை சதம் கடந்து 8 பவுண்டரி 3 சிக்சருடன் 79 ஓட்டங்கள் அடித்திருந்த நிலையில் மும்பை நிலவிய அதிகப்படியான வெப்பத்தை தாங்க முடியாமல் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார்.

அந்த நிலைமையில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாட நிலையில் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலியும் அரை சதம் கடந்தார்.

நேரம் செல்ல செல்ல நேர்த்தியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அவர் தம்முடைய 50 ஆவது சதத்தை அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் உலக சாதனையை உடைத்தார். 

இதற்கு முன் சச்சின் 452 இன்னிங்ஸில் 49 சதங்கள் அடித்திருந்த நிலையில் விராட் கோலி 259 இன்னிங்சிலேயே 50 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்தார். 

அதுமட்டுமல்லாமல் இந்த உலகக் கிண்ணத்தில் மொத்தம் 700 ஓட்டங்களை குவித்துள்ள அவர் உலகக் கிண்ண  வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் மற்றுமொரு வாழ்நாள் சாதனையை உடைத்தார். 

இதற்கு முன் 2003 உலகக் கிண்ணத்தில் 673 ஓட்டங்கள் அடித்து சச்சின் படைத்த சாதனையை 2019 இல் ரோஹித், வார்னர் போன்றவர்கள் நெருங்கியும் தொட முடியவில்லை. இருப்பினும் தற்போது அதையும் உடைத்துள்ள கோலி ஒரு உலகக் கிண்ணத்தில் அதிக முறை (8 முறை) 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களை விளாசிய வீரர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார். 

இதற்கு முன் சச்சின் (2003 இல்) மற்றும் சாகிப் அல் ஹசன் (2019 இல்) தலா 7 முறை 50+ ஓட்டங்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

மேலும் உலகக் கின்னத்தில் ஒரு தொடரில் 700 ஓட்டங்களை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் படைத்த அவர் தலைவணங்கிய போது பெவிலியனிலிருந்து சச்சின் மனதார கைதட்டி பாராட்டினார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு