கெயிலின் சாதணை தகர்ப்பு!! -3 புதிய உலக சாதனை படைத்த ஹிட்மேன்-

ஆசிரியர் - Editor II
கெயிலின் சாதணை தகர்ப்பு!! -3 புதிய உலக சாதனை படைத்த ஹிட்மேன்-

ஐ.சி.சி உலகக் கிண்ண 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் முதல் அரையிறுதி போட்டி இன்று மதியம் 2 மணிக்கு மும்பையில் ஆரம்பமானது.

அதில் ரோஹித் தலைமையிலான இந்தியா மற்றும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதின. 

நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மாணித்தார்.

அதை தொடர்ந்து துடுப்பெடுத்தாட அணித்தலைவர் ரோஹித் மற்றும் கில் ஆகியோர் களமிறங்கிய நிலையில் போல்ட் பந்து வீச்சை ஆரம்பித்தார்.

போல்ட்டை அதிரடியாக எதிர்கொண்ட ரோஹித் பவுண்டரி, சிக்சர்களையும் பறக்க விட்டு நல்ல ஆரம்பத்தை கொடுத்தார். குறிப்பாக முதல் 5 பந்துப் பரிமாற்றங்கள் முடிவதற்குள் 3 சிக்சர்களை தெறிக்க விட்ட அவர் இந்த உலகக் கிண்ணத்தில் மொத்தம் 27 சிக்சர்கள் அடித்துள்ளார். 

இதன் வாயிலாக உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற மேற்கிந்தியத் ஜாம்பவான் கிறிஸ் கெயில் சாதனையை உடைத்த ரோகித் சர்மா புதிய உலக சாதனை படைத்தார். 

இதற்கு முன் 2015 உலகக் கிண்னா தொடரில் 26 சிக்ஸர்கள் அடித்திருந்ததே முந்தைய உலக சாதனையாகும்.

அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகக் கிண்ண வரலாற்றில் 50 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் மற்றும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற இரட்டை உலக சாதனையும் ரோகித் படைத்துள்ளார். 

இதற்கு முன் உலகக் கிண்ண வரலாற்றில் அதிகபட்சமாக கெயில் 49 சிக்ஸர்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். 

அந்த வகையில் சாதனைகளை படைத்து அதிரடியாக விளையாடிய ரோஹித் அரை சதத்தை தொட வேண்டும் என்ற சுயநலமின்றி விளையாடி 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 47 (29) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

குறிப்பாக 9 பந்துப் பரிமாற்றங்களில் 71 ஓட்டங்கள் என்ற வலுவான ஆரம்ப இணைப்பாட்டம் அமைத்து சொந்த ஊரில் இந்தியாவுக்கு நல்ல ஆரம்பத்தை கொடுத்த அவர் ரசிகர்களின் பாராட்டுகளுடன் வெளியேறினார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு