SuperTopAds

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களின் உடற்தகுதி மோசம்!! -மஹேல கடும் விசனம்-

ஆசிரியர் - Editor II
இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களின் உடற்தகுதி மோசம்!! -மஹேல கடும் விசனம்-

பாக்கிஸ்தான் அணியை வென்றிருந்தால் உலக கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியின் பயணம் வேறு விதமாக இருந்திருக்கும் என்று மகேலஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்தியாவிற்கு சென்றதும் ஆடுகளங்களை அவதானித்ததும் நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடவேண்டும், சிறந்த வேகத்துடன் விளையாடவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டோம். நாங்கள் இது குறித்து துடுப்பாட்டவீரர்களுடன் கலந்துரையாடினோம்.

இலங்கை அணியின் துடுப்பாட்டவீரர்களிற்கு அது பழக்கமில்லாத விடயம். உலக கிண்ணத்திற்கு முன்னர் அவர்கள் அவ்வாறான பாணியில் விளையாடவில்லை. ஏனென்றால் நாங்கள் இலங்கையில் விளையாடிய ஆடுகளங்கள் நாங்கள் அவ்வாறு விளையாடுவதற்கு அனுமதிக்கவில்லை. எங்களின் ஆடுகளங்கள் அவ்வாறானவை.

இது எங்களின் பலம் என்ன? நாங்கள் எவ்வாறு விளையாடப்போகின்றோம்? என்பது குறித்து எங்களை நாங்களே கேள்வி கேட்பதற்கான தருணம்.

உள்ளுர் போட்டிகள் மெதுவான ஆடுகளங்களில் விளையாடப்படுகின்றன. இதன் காரணமாக சிறந்த ஆடுகளங்களில் துடுப்பாட்ட வீரர்கள் தங்கள் சொட்களின் தெரிவுகளை நம்பமாட்டார்கள். அவர்கள் அதற்கு பழகவில்லை.

ஆகவே உலககிண்ணத்தில் உயர்தர பந்துவீச்சிற்கு எதிராக விளையாடுவது மிகவும் சவாலான விடயமாக காணப்பட்டது. முதல் இரண்டுபோட்டிகளில் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள் துரதிஸ்டவசமாக நாங்கள் வெற்றிபெறவில்லை.

என்னை பொறுத்தவரை எங்களின் நிலைமைய பாதித்த முக்கியமான போட்டி பாக்கிஸ்தானிற்கு எதிரானது. நாங்கள் 340 ஓட்டங்களை பெற்றோம். ஆனால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை

நாங்கள் அந்த போட்டியில் பாக்கிஸ்தான் அணியை கட்டுப்படுத்தியிருந்தால் அவ்வாறான ஒரு போட்டி தொடரில் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும்.

நாங்கள் ஒரு பந்து வீச்சு குழாமை உருவாக்கி பயன்படுத்த எண்ணியிருந்தோம். ஆனால் அந்த 5 வீரர்களாலும் விளையாட முடியவில்லை. அந்த 5 பந்து வீச்சாளர்களும் கடந்த 16 மாதங்களில் ஒரு தொடரில் கூட ஒன்றாக எங்கள் அணிக்காக விளையாடவில்லை.

எங்களின் சிறந்த வீரர்களை எப்படி காயங்கள் இல்லாமல் தக்கவைப்பது என்பது நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டிய விடயம். வீரர்களுக்கும் இதில் தனிப்பட்ட பொறுப்புள்ளது.

அவர்கள் தங்கள் உடற்தகுதி நிலையில் எவ்வாறு இறுக்கமான கட்டுப்பாட்டை பேணுவது என்பது குறித்து கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

த{ன் சானக்கவுக்கு தலைமைத்துவம் வழங்கப்படக்கூடாது என எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.