ஐ.நா,வின் போர் நிறுத்த அழைப்பு நிராகரிப்பு!! -காசாவில் குண்டு மழை பொழியும் இஸ்ரேல்-

ஆசிரியர் - Editor II
ஐ.நா,வின் போர் நிறுத்த அழைப்பு நிராகரிப்பு!! -காசாவில் குண்டு மழை பொழியும் இஸ்ரேல்-

ஜ.நா விடுக்கப்பட்ட போர் நிறுத்த அழைப்பை முற்றாக நிராகரித்துள்ள இஸ்ரேல் அரசு ஹமாசை அடியோடு ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என சூளுரைத்துள்ளது. அதன்படி காசா மீதான குண்டு மழையை இஸ்ரேல் இராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று வியாழக்கிழமை 20 ஆவது நாளாக நடைபெற்றது. இரு தரப்புக்கும் இடையில் இதற்கு முன் ஏற்பட்ட 5 போர்களைவிடவும், தற்போதைய போர் ரத்தக்களறியான போராக மாறியிருக்கிறது.

குண்டு வீச்சில் தரைமட்டமாகும் கட்டடங்களின் இடிபாடுகளில் மக்கள் குடும்பம் குடும்பமாக உயிருடன் புதையுண்டு வருகின்றனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான கருவிகள் மற்றும் கனரக வாகனங்கள் கிடைக்காத நிலையில் மக்கள் வெறும் கைகளிலேயே இடிபாடுகளை அகற்றி அதன் அடியில் சிக்கியவர்களை தேடி வருவதை காணக்கூடியதாக உள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு