"ரோகித் அதிரடி" -ஆப்கானை இலகுவாக வீழ்த்திய இந்தியா-

ஆசிரியர் - Editor II

ஐ.சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று புதன்கிழமை டெல்லியில் நடைபெற்ற 9 ஆவது போட்டியில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டது. மதியம் 2 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப்பரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 272 ஓட்டங்களை பெற்றது. அவ்வணி சார்பாக ரஹ்மத்துல்லா குர்பாஸ் 21, இப்ராஹிம் ஜான் ராஹில் ஷா என முன்னிலை துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து  ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இருப்பினும் 4 ஆவது இலக்கிற்கான இணைந்த துடுப்பாட்ட வீரர்கள் 121 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அசத்திய ஓமர்சாய் 62 ஓட்டங்களும், அணித்தலைவர் ஷாஹிதி 80 ஓட்டங்களையும் எடுத்து சரிவை சரி செய்திருந்தனர்.

இந்நிலையில் 273 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பில் அணித்தலைவர் ரோகித் சர்மா மற்றும் இசான் கிசான் ஆகியோர் களமிறங்கி சிறந்த ஆரம்பத்தை கொடுத்தனர்.

இருப்பினும் இசான் கிசான் 47 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களை பெற்ற வேளை ஆட்டமிழந்தார். இருப்பினும் நின்று தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 84 பந்துகளில் 16 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்கள் அடங்கலாக 131 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த விராட் கோலி 56 பந்துகளில் 55 ஓட்டங்களையும், ரேயாஸ் ஐயர் 23 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்ட அணி வெற்றியிலக்கை தொட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு