மக்களின் கருத்துச் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்துகிறது புதிய சட்டம்!
மக்களுடைய கருத்து சுதந்திரம் இலங்கையில் அடிப்படை உரிமையாக அரசியல் அமைப்பிலே உட்புகுத்தப்பட்டிருக்கின்ற ஒரு விடயம். அதை கேள்விக்கு உட்படுத்துகின்ற விதமாக புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினரும், முன்னாள் யாழ்ப்பாண மாநகர முதல்வருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த காலகட்டத்திலே இரண்டு விதமான சட்டங்களை அரசாங்கம் முன்மொழிந்து அதை நிறைவேற்றுவதற்கு துடித்துக் கொண்டிருக்கிறது.
ஒன்று பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம். ஏற்கனவே இருக்கின்ற பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு புதிதாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்கின்ற பேரிலே புதிய ஒரு சட்டத்தை கொண்டு வருகின்ற முனைப்பிலே அரசாங்கம் இருக்கிறது. அதேபோன்று ஆன்லைன் என்று சொல்லப்படுகின்ற நிகழ்நிலைக்காப்பு சட்டமன்ற இன்னுமொரு சட்டத்தையும் கொண்டுவர அரசாங்கம் புரிகிறது.
அரசாங்கத்தின் மீது இருக்கக்கூடிய விமர்சனங்களை பொதுமக்கள் முன்வைக்க விடாமல் தடுக்கின்ற ஒரு மோசமான ஒரு சட்ட ஏற்பாடாக தான் நிகழ்நிலை காப்பு சட்டம் இருக்கிறது. இது மக்களுடைய கருத்து சுதந்திரத்தை அப்பட்டமாக விழுங்குகிறது.
மக்களுடைய கருத்து சுதந்திரம் என்பது இலங்கையில் அடிப்படை உரிமையாக அரசியல் அமைப்பிலே உட்பகுத்தப்பட்டிருக்கின்ற ஒரு விடயம். அதை கேள்விக்கு உட்படுத்துகின்ற விதமாக இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது. இதன் ஊடாக அந்த சட்ட ஏற்பாடுகளை மீறுகின்றவர்கள் தண்டிக்கப்படக்கூடிய வாய்ப்புகளும் இங்கு ஏற்பட்டிருக்கிறது.
இதுவரை காலமும் கருத்து சுதந்திரத்தின் ஊடாக ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர் நட்ட ஈடு கோரி அவமானம் செய்து விட்டார்கள் என்ற நட்டவடு கோரி வழக்கு தாக்கல் செய்கின்ற உரிமை இருக்கின்ற நிலை இன்று அவர் அந்த சட்ட ஏற்பாடுகள் கூடாக தண்டிக்கப்படுகின்ற ஒரு நிலைமையும் தண்டனை வழங்கப்பட்டது கூடிய நிலைமையும் அல்லது சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படக்கூடிய நிலைமையில் ஏற்படுத்தப்பட இருக்கின்றது.
அரசாங்கம் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு அல்லது மக்கள் எதிர்க்க கூடாது என்று கட்டுப்படுத்துவதற்கு செய்கின்ற ஒரு மோசமான ஒரு வேலைத்திட்டமாக தான் நாங்கள் இதை பார்க்கின்றோம். இந்த சட்டம் பாராளுமன்றத்திலே நிறைவேற்றப்படக்கூடாது இந்த சட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் கலந்துரையாட வேண்டும். ஏனென்றால் அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்கள் வாய் திறந்தால் அவர்கள் தண்டிக்கப்படக்கூடிய ஒரு அவல நிலைமை இந்த சட்டத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட போகிறது.
இதற்கு எதிராக முழுமையான எதிர்வினை ஆற்ற வேண்டிய தருணமாக நாங்கள் பார்க்கின்றோம். அதேபோன்று பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் ஏற்கனவே இருந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எந்த விதத்திலும் குறைச்சல் ஆனது அல்ல அல்லது அதைவிட மோசமானது என்று விமர்சிக்கப்படுகின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அதை நாங்கள் எதிர்க்கின்றோம். அந்த சட்டம் இயற்றப்படக்கூடாது அதற்கு எதிராகவும் தமிழ் மக்கள் மட்டுமல்ல இலங்கை தீவில் வாழக்கூடிய சட்டத்தை நேசிக்கின்ற சட்டவாட்சியை நேசிக்கின்ற அல்லது விரும்புகின்ற அனைத்து தரப்பும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நிறுவனங்கள் இந்த சட்டங்கள் இரண்டையும் வன்மையாக எதிர்க்கின்றன. இவற்றை உலகத்தினுடைய சட்ட கோட்பாடுகளுக்கு முரணான சட்டங்களாகவே பார்க்கின்றன. அந்த வகையில் அரசாங்கம் தங்களுடைய அராஜகங்களை முன்னெடுப்பதற்கான கவசங்களாக இந்த இரண்டு சட்டங்களையும் உபயோகிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதினால் இதில் சட்டமாக நிறைவேற்றப்படுவதை தடை செய்ய வேண்டும். அதற்காக அனைவரும் போராடவும் என்றார்.