மன்னாரில் பொலிஸ் கான்ஸ்டபிளின் கையை கடித்துவிட்டு தப்பி ஓடிய அம்புலன்ஸ் சாரதி!

ஆசிரியர் - Editor I
மன்னாரில் பொலிஸ் கான்ஸ்டபிளின் கையை கடித்துவிட்டு தப்பி ஓடிய அம்புலன்ஸ் சாரதி!

ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் அம்பியூலன்ஸ் சாரதி ஒருவரைக் கைது செய்ய சென்ற மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின்  கையைக் கடுமையாக கடித்து விட்டு தப்பிச் சென்றதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முருங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மன்னார் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் முருங்கன் வைத்தியசாலை பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரைக்  கைதுசெய்ய முற்பட்போதே  இவ்வாறு சந்தேக நபர் கையைக் கடித்து விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு