தளபதியின் லியோ இசை வெளியீட்டு விழா ரத்து

ஆசிரியர் - Editor II
தளபதியின் லியோ இசை வெளியீட்டு விழா ரத்து

தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடிப்பில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அதன்படி இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளானர்.

இந்த இசைவெளியீட்டு விழாவானது மலேசியாவில் நடத்தப்படவிருந்த நிலையில் தளபதி விஜய் வெளிநாட்டில் செய்வதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து தமிழகத்தில் தான் இசை வெளியீடு நிகழ்ச்சி நடைப்பெறும் என படத்தின் தயாரிப்பாளர் லலித் அண்மையில் தெரிவித்தார்.

இந்நிலையில் இசைவெளியீட்டு விழா முழுவதுமாக ரத்து செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

இவ்விடயம் தொடர்பில் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது.

"லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்கிறோம். நிகழ்ச்சியை காண வரும் ரசிகர்களின் பாஸ் கோரிக்கைகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வருகின்றன. எனவே பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். 

பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல" என்று தெரிவித்து இருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு