கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஜெனிவா செல்கின்றனர்!

ஆசிரியர் - Admin
கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஜெனிவா செல்கின்றனர்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் ஓரங்கமாக, வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் அறிக்கை மீதான கலந்துரையாடல் நடைபெறவிருப்பதுடன் இதன்போது இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.     

இன்று வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் அறிக்கை மீதான கலந்துரையாடல் நடைபெறும். இதன்போது, இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள், அச்சம்பவங்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டல், இழப்பீடு வழங்கல் மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகியவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்பன பற்றியும் விரிவாக ஆராயப்படும்.

இது இவ்வாறிருக்க இலங்கை தொடர்பான பக்க நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்காகவும் எதிர்வரும் 24 ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் ஜெனிவா செல்லவுள்ளனர்.

அங்கு இடம்பெறவுள்ள சந்திப்புக்கள் குறித்து இன்னமும் உறுதியாகத் தீர்மானிக்கப்படாத போதிலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகள், இணையனுசரணை நாடுகள் மற்றும் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுடன் விசேட சந்திப்புக்களை நடாத்துவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு