பளுதூக்கும் போட்டியில் 8 பதக்கங்கள்!! -சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த யாழ்.பல்கலை பெண்கள் அணி-

ஆசிரியர் - Editor II
பளுதூக்கும் போட்டியில் 8 பதக்கங்கள்!! -சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த யாழ்.பல்கலை பெண்கள் அணி-

பல்கலைக் கழகங்களுகிடையிலான 14 ஆவது மினி ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் யாழ்.பல்கலைக்கழக பெண்கள் அணி 8 பதக்கங்களைக் கைப்பற்றி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.

குறித்த மினி ஒலிம்பிக் பளுதூக்கல் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் முதன் முறையாக பங்கு பற்றிய யாழ். பல்கலைக்கழக பெண்கள் அணி 5 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள்,  ஒரு வெண்கல பதக்கம் உட்பட 8 பதக்கங்களை கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.

இதில் 49 கிலோ எடைப் பிரிவில் என்.மிதுஷா 90 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும், அதே எடைப் பிரிவில் கே.சாணுஜா 71 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும்,  55 கிலோ எடைப் பிரிவில் ஏன்.ஏ.ஐ.என்.ரத்னாயக்க 100 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும், 64 கிலோ எடைப் பிரிவில் ஜே.பஜீனா  120 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், 76 கிலோ எடைப் பிரிவில் ஆர்.தசாந்தினி 110 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும்,  81 கிலோ எடைப் பிரிவில் ஆர்.தக்சாயினி 100 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும்,  87 கிலோ எடைப் பிரிவில் டி.எம்.டி.எம். தனபால 79 கிலோ பளுவைத் தூக்கி வெண்கல பதக்கத்தையும்,  87கிலோவிற்கு மேற்பட்ட எடைப் பிரிவில் எஸ்.ஜீவமலர் 80 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு