SuperTopAds

50 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை!! -23 வருட பகையை தீர்த்து 8 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை தனதாக்கிய இந்தியா-

ஆசிரியர் - Editor II
50 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை!! -23 வருட பகையை தீர்த்து 8 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை தனதாக்கிய இந்தியா-

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் 10 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

16 ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் ஒன்று நடந்தது. மாலை 3 மணியளவில் ஆட்டம் ஆரம்பிக்க இருந்த நிலையில் மழையால் தாமதமானது. இதைதொடர்ந்து, 3.40 மணியளவில் ஆட்டம் மீண்டும் ஆரம்பமானது.

முதலாவதாக களமிறங்கிய குசல் பெரேரா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். தொடர்ந்து, பதும் நிசான்கா 2 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். சதீரா மற்றும் சரீத் அசலங்கா, தசுன் ஷனாகா ஆகியோரும் ஒரு ஓட்டம் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தனஞ்சயா டி சில்வா 4 ஓட்டங்களஒ எடுத்து ஆட்டமிழந்தார். குசல் மெடிஸ் 17 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டியில் அடுத்தடுத்து இலக்குகளை இழந்து இலங்கை அணி தடுமாறி வருகிறது. 12 ஓட்டங்களுக்கு 6 இலக்குகளை இலங்கை அணி இழந்துள்ளது.

ஒரே பந்துப் பரிமாற்றத்தில் 4 இலக்குகள் என மொத்தம் 6 இலக்குகளை சாய்த்து இந்திய பந்து வீச்சாளர் சிராஜ் அசத்தியுள்ளார். 

12.3 பந்துப் பரிமாற்றங்களில் 8 இலக்குகள் இழப்பிற்கு 40 ஓட்டங்களை எடுத்து இலங்கை அணி விளையாடி வந்தது. தொடர்ந்து, துணித் வெல்லாலகே 8 ஓட்டங்களுடனும், பிரமோத் மதுஷான் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். மதீஷா பதிரனா ஓட்டம் எடுக்கால் ஆட்டமிழந்தார். துஷன் ஹேமந்த் 13 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்கமல் இருந்தார்.

இந்நிலையில், 15.2 பந்துப் பரிமாற்றங்களில் 50 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்து இலங்கை அணி சுருண்டது.

இதையடுத்து 51 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.

இந்த நிலையில் 6.1 பந்துப் பரிமாற்றங்களில் எந்த இலக்கினையும் இழக்காமல் இந்திய அணி 51 ஓட்டங்களை பெற்றது. இதன் மூலம் நடப்பு சாம்பியனான இலங்கை அணியை 10 இலக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. 

இஷான் கிஷான் 23 ஓட்டங்களையும், சுப்மன் கில் 27 ஓட்டங்களையும் எடுத்தனர். இதன் மூலம் 8 ஆவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ரோகித் சர்மா தலைமையில் இரண்டாவது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.