யாழ்.நகரில் ஹயஸ் வாகனம் ஒன்றை சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படை! ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் ஹயஸ் வாகனம் ஒன்றை சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படை! ஒருவர் கைது..

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் யாழ்.நகர்ப் பகுதியில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கிலோ கிராம் 40 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஹயஸ் வாகனமும் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 70 வயதுமிக்க ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ள நிலையில் சந்தேக நபரை இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு