கனடா ஆசைகாட்டி பெண்ணிடம் 10 லட்சம் சுருட்டிய முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது..!

ஆசிரியர் - Editor I
கனடா ஆசைகாட்டி பெண்ணிடம் 10 லட்சம் சுருட்டிய முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது..!

கனடா அனுப்புவதாக பணமோசடியில் ஈடுபட்ட காத்தான் குடியைச்சேர்ந்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சில மாதங்களிற்கு முன்னர் பளை பகுதியைச்சேர்ந்த பெண் ஒருவர் சமுக வலைத்தளம் ஊடாக வந்த விளம்பரம் ஒன்றில் அறிமுகமாகி கனடா செல்வதற்காக பத்து லட்சம் வைப்பிலிட்டுள்ளார்.

அதன் பின் நீண்ட நாட்கள் ஏமாற்றி வந்ததால் கெடிகாமம் பொலிஸ் ஊடாக யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவில் முறைப்பாடு மேற்கொண்டார்.

விசாரணைகளை மேற்கொண்ட யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு  பொறுப்பதிகாரி குணறோயன் தலமையிலான குழுவினர் 

காத்தான் குடியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான 57 வயதுடைய  சந்தேகநபரை கைது செய்து  யாழ்ப்பாணம் மேலதிக நீதவானிடம் முற்படுத்தினர்.

இதன்போது சந்தேகநபரை விளக்கமறியலிலை் வைக்குமாறு உத்தரவிட்டார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு