யாழ்.நாவற்குழியில் பேருந்திலிருந்து இறங்கிய அரச ஊழியர் திடீர் மரணம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழியில் பேருந்திலிருந்து இறங்கிய அரச ஊழியர் திடீர் மரணம்...

யாழ்ப்பாணம் - நாவற்குழியில் உள்ள தனது பணியிடத்திற்கு பேருந்தில் வருகை தந்தவர் பேருந்தில் இருந்து இறங்கிய நிலையில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

பனை அபிவிருத்தி சபையில் பணிபுரியும் மட்டுவிலைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சதீஸ்குமார் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு