பரபரப்பை ஏற்படுத்திய விஜயலட்சுமி முறைப்பாடு!! -நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன்-

ஆசிரியர் - Editor II
பரபரப்பை ஏற்படுத்திய விஜயலட்சுமி முறைப்பாடு!! -நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன்-

நடிகை விஜயலட்சுமி பதிவு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை பொலிஸ் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்.

அதில், சீமான் திருமணம் செய்வதாக கூறி காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், கணவன் - மனைவி போல் குடும்பம் நடத்திவிட்டு தன்னை பயன்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்

மேலும், தன்னிடம் பணம், நகையை பறித்து மோசடி செய்ததாகவும், 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தீவிரமான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பல்வேறு விசாரணைக்கு பின்னர் மகப்பேறு மருத்துவர்கள் சோதனை நடத்தினர்.

விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்த போது கையெழுத்து போட்டது யார்? என்று விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமியின் முறைப்பாடு குறித்து விசாரணை நடத்த ஆஜராகும்படி சீமானுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் அனுப்பியுள்ளனர்.

இன்று காலை 10:30 மணி அளவில் வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு