இந்திய அரசாங்கம் சார்பில் ஒவ்வொரு வருடமும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.
இவ்விழாவில் 2021 அஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்பட்டது. இதில், 'கருவறை' ஆவணப் படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏக்காகவுன் திரைப்படத்திற்காக பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.