செஸ் உலகக் கோப்பையை வென்றார் கார்ல்சன்!! -2 ஆம் இடத்தில் பிரக்ஞானந்தா-

ஆசிரியர் - Editor II
செஸ் உலகக் கோப்பையை வென்றார் கார்ல்சன்!! -2 ஆம் இடத்தில் பிரக்ஞானந்தா-

அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் உலக கோப்பை செஸ் தொடர் நடந்தது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3 ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.

அரையிறுதி சுற்றில் இரு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் சமனிலையில் முடிந்தது. இதைத் தொடர்ந்து சமநிலை தவிர்ப்பு சுற்று நடத்தப்பட்டு, இதில் வெற்று பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது. 

அதன்படி சமநிலை சுற்றில் பிரக்ஞானந்தா, உலகின் மூன்றாம் இடத்தில் வீரரான பேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். 

இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகள் சமனில் முடிந்தன. 

இதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை சமநிலை தவிர்ப்பு சுற்று நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். மேக்னஸ் கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தா இடையிலான சமநிலை தவிர்ப்பு சுற்றின் முதல் போட்டி பரபரப்பாக நடைபெற்றது. இதில் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்று ஆரம்பித்தது. இந்த சுற்றும் 25 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையைாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த சுற்றும் சமனில் முடிந்தது. 

அந்த வகையில் மேக்னஸ் கார்ல்சன் முதல் சுற்றில் வெற்றி பெற்று இருந்ததால், சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு