ஜெயிலர் சூப்பர் டூப்பர் ஹிட்!! -நெல்சனுக்கு தயாரிப்பு குழு ரோல்ஸ் ராய்ஸ் பரிசு-

ஆசிரியர் - Editor II
ஜெயிலர் சூப்பர் டூப்பர் ஹிட்!! -நெல்சனுக்கு தயாரிப்பு குழு ரோல்ஸ் ராய்ஸ் பரிசு-

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி வெளியாகி இருந்தது.

படம் வெளியாகி முதல் நாளில் இருந்தே வசூலில் செம வேட்டை நடத்தி வருகிறது. 500 கோடி ரூபாய்க்கு மேல் படம் உலகம் முழுவதும் வசூலிக்க படக்குழு செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இப்படம் எல்லா இடங்களிலும் லாபத்தை கொடுத்துள்ளதால் சன் பிக்சர்ஸ் சந்தோசத்தில் உள்ளார்களாம்.

எனவே இயக்குனர் நெல்சனுக்கு அவர்கள் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) காரை பரிசளிக்க இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு