விஜயின் தளபதி 68; வெளியான புது தகவல்

ஆசிரியர் - Editor II
விஜயின் தளபதி 68; வெளியான புது தகவல்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவான லியோ படத்தின், பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படம் ஒக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், லியோ படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு தளபதி 68 என்று அழைக்கப்படும் இந்த படத்தினை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் தளபதி 68 படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பிரியன்கா மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுதவிர இந்த படத்தில் ஜோதிகா, மாதவன் மற்றும் பிரபு தேவா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், தளபதி 68 படம் தொடர்பான அப்டேட்கள் லியோ படம் வெளியான பிறகு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதே தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு செய்தியாளர்களை சந்தித்த போதும் தெரிவித்து இருந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு