தளபதியின் கோட்டையை தகர்த்த சூப்பஸ்டார்!! -வசூலில் வேட்டையில் ஜெயிலர்-

ஆசிரியர் - Editor II
தளபதியின் கோட்டையை தகர்த்த சூப்பஸ்டார்!! -வசூலில் வேட்டையில் ஜெயிலர்-

சூப்பஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்தது.

மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சூப்பஸ்டார் ரஜினிக்கு மாஸ் கம் பேக் கொடுத்துள்ளது. முதல் நாளில் இருந்து உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில் இப்படம் வெளிவந்த நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் கேரளாவில் மட்டுமே 23.8 கோடி ரூபா வரை வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் இதுவரை தளபதி விஜய் படங்கள் செய்த அனைத்து வசூல் சாதனையையும் கேரளாவில் முறியடித்துள்ளது ஜெயிலர்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் கேரளாவில் அதிகம் வசூல் செய்தது முதல் இடத்தை பிடித்தது ஜெயிலர் தான் என்றும் சாதனை படைத்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு