தமிழ் கலாச்சார முறைப்படி மேக்ஸ்வெல் மனைவிக்கு வளைகாப்பு

ஆசிரியர் - Editor II
தமிழ் கலாச்சார முறைப்படி மேக்ஸ்வெல் மனைவிக்கு வளைகாப்பு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமனுக்கு தமிழ் கலாச்சார முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் அவுஸ்திரேலிய தமிழ்ப் பெண்ணான வினி ராமன் ஆகிய இருவரும் 2017 ஆம் ஆண்டு முதல் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு இருவருக்கும் வெகு சிறப்புடன் இரு கலாச்சார முறைப்படியும் திருமணம் நடைபெற்று முடிந்தது. 

இந்நிலையில் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமன் கர்ப்பமாக உள்ள நிலையில், அவருக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை வினி மேக்ஸ்வேல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவுக்கு கீழ் பலரும் தங்களது வாழ்த்தினையும் மகிழ்ச்சியையும் ஏராளமாக பகிர்ந்து வருகின்றனர்.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு