13ம் திருத்தச்சட்ட அமுலாக்கத்துடன் மாகாணசபைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும்!

ஆசிரியர் - Editor IV
13ம் திருத்தச்சட்ட அமுலாக்கத்துடன் மாகாணசபைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும்!

13ம் திருத்தச்சட்ட அமுலாக்கத்துடன் மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என சுரேஸ் பிறேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

13ம் திருத்தச்சட்ட அமுலாக்கத்துடன் மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என சுரேஸ் பிறேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருட கால தாமதத்திற்குப் பின் கடந்த 20 ம் திகதி டெல்லி்க்கு சென்று இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றன. இந்தியா செல்வதற்கு முன் 13 ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டுமெனவும் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமெனவும் முக்கிய கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டன.

மக்களுடைய அபிலாசைகள் பூர்த்தி செய்வதற்கும் கண்ணியமாக வாழ்வதற்கும் 13 ம் திருத்தச்சட்ட அமுலாக்கத்துடன் மாகாண சபைத் தேர்தலும் நடாத்தப்பட வேண்டுமென சந்திப்பின் போது இலங்கை அரசாங்கத்திற்கு மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். இவற்றைச் செயற்படுத்துவதாக இலங்கை ஜனாதிபதியும் கூறியுள்ளார்.

இந்தியாவினுடைய பாதுகாப்பும் இலங்கையினுடைய பாதுகாப்பும் பின்னிப் பிணைந்த விடயங்கள் எனவும் இந்து சமுத்திரப் பிரதேசம் பாதுகாப்பாக இருப்பதற்கு இலங்கை இந்தியா போன்ற நாடுகள் ஒன்றாகச் செயற்பட வேண்டும் எனவும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடக்கு கிழக்கில் இடம்பெறும் அபிவிருத்திக்குத் தொடர்ந்தும் உதவி செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

முன்னரைப் போல் காலங் கடத்தாது மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டுமென்பது தமிழ் மக்களின் கோரிக்கை. பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள ஒப்படைக்க பாராளுமன்றத்தை நாடுவதுடன் ஏனையவற்றை மாகாணசபைத் தேர்தலை நடாத்தி இந்தியாவிற்கும் தமிழ் மக்களுக்கும் வழங்கிய உறுதிமொழியைக் காப்பாற்றுவாரென நம்புகின்றோம்.

இலங்கை ஜனாதிபதிக்கு எடுத்துரைத்ததற்கு நன்றி தெரிவிக்கின்றோம். அத்தோடு நின்றுவிடாது இலங்கை அரசு நடைமுறைப்படுத்துகின்றதா என்பதை கண்காணி்ப்பதற்கு ஒரு பொறிமுறையை இந்திய அரசு உருவாக்க வேண்டும். இது காலவரையரையின்றி அடுத்தடுத்த மாதங்களுக்குள் பூர்த்தியடையும் சந்தர்ப்பத்தில் தான் வடகிழக்கு மாகாணசபைகள் சரியாக இயங்கும். குறிப்பிட்ட காலத்திற்கு நடைமுறைப்படுத்தாவிட்டால் மேலதிகமான அழுத்தங்களை மேற்கொள்ளத் தமிழ்க் கட்சிகள் நடவடிக்கை எடுக்கும்.

சுகாதார அமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. இலங்கையில் சுகாதாரத்துறை மிக மோசமான பின்னடைவை அடைந்துள்ளது. பிரதானமாக ஒவ்வாமைக்காக கொண்டுவரப்பட்ட மருந்துகள் பலரைச் சாவடித்திருக்கின்றது. இவற்றுடன் மருந்து தட்டுப்பாடும் நிலவுகின்றது. சிறுவர்களுக்கான றிச்வே வைத்தியசாலை முதல் அனைத்து வைத்தியசாலைகளிலும் ஊழியர் , மருந்து மற்றும் உபகரணப் பற்றாக்குறை தொடர்ந்த வண்ணமுள்ளது.

சுகாதாரத்துறை செயலாளரால் செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலைகளிலுள்ள மருந்து தட்டுப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்கக்கூடாதெனவும் அவ்வாறு செய்யும் பட்சத்தில் தவறெனவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் மக்களுடைய ஒட்டுமொத்த அழிவிற்கும் வழி வகுக்கும்.

வைத்தியசாலைகளில் தற்போது பொதுமக்களே பல உதவிகளை செய்து வருகின்றனர். எனவே மக்களுக்குத் தேவையான விடயங்களை செய்ய முடியாதவிட்டால் பதவியை இராஜினாமா செய்வதே பொருத்தமாகும் எனத் தெரிவித்தார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு