அப்பா பக்கத்தில் நெருங்க கூட முடியாமல் போராடும் 5 வாரிசு நடிகர்கள்!
சாதாரணமாக சினிமாவிற்குள் எல்லோரும் நுழைந்து விட முடியாது. சிலர் திறமையின் மூலமாக உள்ளே வருவார்கள். இல்லை என்றால் அவர்களுடைய குடும்பத்தில் யாராவது சினிமாவில் இருந்து அவர்களுக்கு பக்க பலமாக உதவி செய்வார்கள். அப்படி சில நடிகர்களுக்கு அவர்களுடைய அப்பாவின் மூலம் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை சரியாக பயன்படுத்த முடியாமல் போராடிக் கொண்டு வருகிறார்கள். அந்த வாரிசு நடிகர்களை பற்றி பார்க்கலாம்.
சக்தி: தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் பி வாசுவின் மகன் சக்தி. இவர் 2007 ஆம் ஆண்டு தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். ஆனால் இவர் நடித்த படங்கள் எதுவும் சிறப்பாக அமையாமல் போய்விட்டது. அத்துடன் இவருடைய நடிப்பும் சொல்லும் படியாக இல்லை. அதனாலேயே கொஞ்சம் கொஞ்சமாக இவரே சினிமாவிலிருந்து விலகி விட்டார்.
கௌதம் கார்த்திக்: இவர் சினிமாவிற்கு அறிமுகமானது பெரிய பெரிய ஜாம்பவான்களை வைத்து தான். அதாவது இவர் ஹீரோவாக அறிமுகமான படம் கடல். இப்படம் மணிரத்தினம் இயக்கத்தில் வைரமுத்து வரிகளுடன் ஏஆர் ரகுமான் இசையமைத்து, நடிகை ராதாவின் மகளுடன் ஜோடி போட்டு நடித்தார். ஆனால் அது எதுவுமே எடுபடாமல் நடித்த முதல் படம் சராசரியான வரவேற்பை மட்டுமே பெற்றது. இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து எப்படியாவது தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்று முட்டி மோதிக் கொண்டு தவித்து வருகிறார்.
ஜீவா: பிரம்மாண்ட தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரியின் மகனாக ஜீவா சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்ததிலிருந்து இவருக்கும் சரி இவருடைய படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் போகப் போக அதை சரியாக தக்கவைத்துக் கொள்ள முடியாமல் கொஞ்சம் தடுமாறி போய்விட்டார். அதன்பின் இவரால் எழுந்து வர முடியாமல் தற்போது வரை நல்ல படத்தை கொடுப்பதற்கு போராடி வருகிறார்.
அதர்வா: இவர் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த படத்திலிருந்து இவருக்கு பெண் ரசிகர்கள் ஏகப்பட்டோர் கிடைத்தார்கள். அதன்பின் நடித்த சில படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் இடைப்பட்ட காலத்தில் தேவையில்லாத கெட்ட பழக்கத்திற்கு அடிமையானதால் இவருடைய கவனம் நடிப்பில் கொஞ்சம் சிதறிவிட்டது. ஆனாலும் அப்பா வாங்கின பேரை கொஞ்சமாவது காப்பாற்ற வேண்டும் என்று போராடி வருகிறார்.
ஜெய்: இவர் இசைக் கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அதாவது ஸ்ரீகாந்த் தேவா, சபேஷ் முரளி போன்றவர்கள் இவருடைய மாமா. அதன்மூலம் ஈசியாக இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிட்டது. இவரிடம் ஹீரோக்கு உண்டான அம்சங்கள் அத்தனை இருந்தும் சினிமாவில் நடிகராக பிரபலமாக முடியவில்லை. ஆனாலும் விடாமுயற்சியுடன் இவரை தேடி வரும் வாய்ப்புகளை எடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சில படங்களில் கமிட் ஆகி நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது இவர் நடிக்க இருக்கும் படங்களாவது இவருக்கு கை கொடுக்குமா என்று பார்க்கலாம்.