SuperTopAds

இந்தியா- இலங்கை இடையே பாலம் அமைக்க திட்டம்!

ஆசிரியர் - Editor IV
இந்தியா- இலங்கை இடையே பாலம் அமைக்க திட்டம்!

இந்தியாவும் இலங்கையும் தங்களுக்கிடையில் நிலதொடர்பை ஏற்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளன. இலங்கை ஜனாதிபதியின் பிராந்திய வல்லரசிற்கான விஜயத்தின் போது இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவும் இலங்கையும் தங்களுக்கிடையில் நிலதொடர்பை ஏற்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளன. இலங்கை ஜனாதிபதியின் பிராந்திய வல்லரசிற்கான விஜயத்தின் போது இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.     

இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்குநீரிணை ஊடாக நில இணைப்பை ஏற்படுத்துவது திருகோணமலை கொழும்பு போன்றவற்றை இந்தியா சென்றடைவதை இலகுவாக்கலாம் மில்லேனியம் வருட உறவுகளை வலுப்படுத்தலாம் என இரண்டு தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள மூலோபாய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரைப்பாலம் மற்றும் பெட்ரோலிய குழாய்களுக்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வுகள் இடம்பெறும் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி பேச்சுவார்த்தைகளின் பின்னர் தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்ட முன்னொருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அவருக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவிவகித்தவர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட நிலையில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க ஒருவருடகாலத்தின் பின்னர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

உணவு எரிபொருள் மருந்துபோன்றவற்றிற்கான தட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை கடந்த வருடம் நாளாந்த ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்டது,இலங்கை தனது 4.6 பில்லியன் டொலர் கடனை செலுத்த முடியாமல் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்ட போதிலும் இந்தியா 4 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியது.

இலங்கை கடந்தவருடம் பல சவால்களை எதிர்கொண்டது ஆனால் நாங்கள் இலங்கை மக்களுடன் நெருங்கிய நண்பனை போல தோளோடு தோள் நின்றது என மோடி தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளில் சீனாவின் பிரசன்னம் குறித்த கரிசனையும் வெளியிடப்பட்டது என இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் தெரிவித்தார்.

இந்தியா இலங்கையை தனது கொல்லைப்புறமாக கருதுவதுடன் இலங்கையிலும் பிராந்தியத்திலும் சீனாவின் பிரசன்னம் குறித்து இந்திய அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கிய நாடாக சீனா காணப்படுகின்றது - இலங்கையால் மிகப்பெரிய கடனை சீனாவிற்கு திருப்பி செலுத்த முடியாத நிலையேற்பட்டதை தொடர்ந்து அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் 99 வருட குத்தகைகு எடுத்தது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் 1.4 பில்லியன் டொலர் திட்டத்தினை சீனா முன்னெடுத்துள்ளது-இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு இது – சீனா இதனை தனது வேவுநடவடிக்கைகளிற்கு பயன்படுத்தலாம் என இந்தியா அச்சமடைந்துள்ளது.