பிரான்சில் தொடரும் வன்முறை!! -45 ஆயிரம் பொலிஸார் குவிப்பு-

ஆசிரியர் - Editor II
பிரான்சில் தொடரும் வன்முறை!! -45 ஆயிரம் பொலிஸார் குவிப்பு-

பிரான்ஸில் கடந்த வாரம் நேஹல்.எம் எனும் 17 வயது சிறுவன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் கொல்லப்பட்டார்.

இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதால் நாடு முழுவதும் பெரும் கலவரம் வெடித்துள்ளது. 

பொலிஸார் சிறுபான்மையினருக்கு எதிரானது எனும் எண்ணம் உருவாகி, அங்கு வன்முறை அதிகரித்திருக்கிறது. மேலும் இது பிரான்சில் கடுமையான இன ரீதியான பதட்டங்களை உண்டாக்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

நேற்றைய நிலவரப்படி, இது சம்பந்தமாக மேலும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேஹல், பாரிஸுக்கு அருகிலுள்ள சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, பொலிஸார் ஒரே இரவில் 719 பேரை கைது செய்துள்ளனர். 

அதற்கு முந்தைய இரவு சுமார் 1,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறையால் சுமார் 45 பொலிஸார் மற்றும் துணை இராணுவ படையினர் காயமடைந்திருப்பதாகவும், 577 வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும், 74 கட்டடங்கள் தீவைக்கப்பட்டதாகவும், வீதிகளிலும், பிற பொதுவெளியிலும் 871 இடங்களில் தீ வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20க்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்கள், துணை இராணுவ முகாம்கள் தாக்கப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பதிவாகி வரும் எண்ணிக்கைகளின்படி, நாடு முழுவதும் பதற்றம் குறைந்து வருவது போல் தெரிந்தாலும், பொலிஸார் பல இடங்களில் புது சம்பவங்களை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

பாரிஸின் தெற்கே உள்ள ஒரு நகரத்தின் மேயர், வின்சென்ட் ஜீன்ப்ரூன் வீட்டிற்குள் கலவரக்காரர்கள் ஒரு காரை மோதி, அவரது மனைவி மற்றும் அவரது குழந்தைகளில் ஒருவரை காயப்படுத்தி, தீவைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு