நடிப்பில் இருந்து திடீரென ஓய்வெடுக்கும் விஜய்!! தீவிர அரசியலில் களமிறங்கவா?

ஆசிரியர் - Editor II
நடிப்பில் இருந்து திடீரென ஓய்வெடுக்கும் விஜய்!! தீவிர அரசியலில் களமிறங்கவா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள தளபதி விஜய் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து மூன்று வருடங்கள் இடைவேளை எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் லியோ படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ள நிலையில், தளபதி விஜய்யின் தற்போதைய அறிவிப்பு ரசிகர்கள் உட்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, நடிப்பதில் இருந்து மூன்று ஆண்டுகள் விஜய் பிரேக் எடுக்கவிருக்கிறாராம்.

2026 ஆம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டே விஜய் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது.

லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தை முடித்துக்கொடுத்த பின், 3 ஆண்டுகள் இடைவேளை என்கிறார்கள் விஜய் நெருங்கிய வட்டத்தினர்.

இந்த விடயமானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.   

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு