தளபதியின் லியோ படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்

ஆசிரியர் - Editor II
தளபதியின் லியோ படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

அண்மையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள நா ரெடி பாடல் வெளியாகி பிரபலமானது. லியோ படத்தில் சஞ்சய் தத், கவுதம் மேனன், திரிஷா, மன்சூர் அலி கான், அர்ஜுன் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் லியோ படத்தில் பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் இதற்கு முன்பு தமிழில் இமைக்க நொடிகள் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு