உலக கிண்ண தகுதிச்சுற்றில் இலங்கை வீரரின் ஆதிக்கம்!! -20 இலக்குகளை வீழ்த்தி மிரட்டிய ஹசரங்க-

ஆசிரியர் - Editor II
உலக கிண்ண தகுதிச்சுற்றில் இலங்கை வீரரின் ஆதிக்கம்!! -20 இலக்குகளை வீழ்த்தி மிரட்டிய ஹசரங்க-

உலக கிண்ண தகுதிச்சுற்றி போட்டிகளில் இதுவரை 20 இலக்குகளை கைப்பற்றி, இலங்கை அணியின் சகலதுறை வீரர் வணிந்து ஹசரங்கா முதலிடத்தில் உள்ளார்.

ஐ.சி.சி ஒருநாள் உலக கிண்ணத்துக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்பேயில் நடைபெற்று வருகிறது. சூப்பர் சிக்ஸில் மிரட்டி வரும் இலங்கை அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுவிட்டது.

இந்த சுற்றுகளில் அதிக இலக்குகளை வீழ்த்தியவர் பட்டியலில், இலங்கையின் ஹசரங்கா முதலிடத்தில் உள்ளார்.

20 இலக்குகளை வீழ்த்தியுள்ள ஹசரங்கா முதலிடத்தில் உள்ள நிலையில், இரண்டாவது இடத்தில் 13 இலக்குகளை கைப்பற்றி மற்றொரு இலங்கை வீரர் தீக்ஷணா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு