SuperTopAds

டைட்டன் நீர்மூழ்கியின் உடைந்த பாகங்கள் மீட்பு!! -சடலங்களும் சிக்கியது-

ஆசிரியர் - Editor II
டைட்டன் நீர்மூழ்கியின் உடைந்த பாகங்கள் மீட்பு!! -சடலங்களும் சிக்கியது-

டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்கு சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதில் சடலங்களும் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் அமெரிக்க கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில்:-

அமெரிக்க மருத்துவ நிபுணர்களால் முறையாக பகுப்பாய்வு செய்யப்படும் என்றும் அதன் பின்னரே உறுதி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பார்வையிடுவதற்கான பயணத்தின் போது வெடித்த ஓஷன் கேட் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் 5 பேர் இருந்தனர். இந்த நிலையில், ஜூன் 28 ஆம் திகதி டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் பல மீட்கப்பட்டது.

இதனையடுத்து கனடாவின் நியூபவுண்ட்லாந்து (Newfoundland) மாகாணத்தின் செயின்ட் ஜான்ஸ் (St John’s) கடற்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டது. கடந்த 1912 ஆம் ஆண்டில் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பல் தற்போது கனடாவின் நியூபௌண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவிலுள்ள கடல்படுகையில் காணப்படுகிறது.

இதனைப் பார்வையிடும் பொருட்டு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்காக ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் என்ற அமெரிக்க தனியார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் கடந்த 18 ஆம் திகதி பயணப்பட்டுள்ளது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக புறப்பட்ட 1.45 மணி நேரத்தில் அந்த நீர்மூழ்கிக் கப்பல் அழுத்தம் காரணமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில், டைட்டானிக் கப்பலைப் பார்வையிடுவதற்காக நீர்மூழ்கியில் சென்ற பாகிஸ்தான் தொழிலதிபர் ஷேஸாதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகியோரும்,

ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டாக்டன் ரஷ், பிரித்தானிய தொழிலதிபர் ஹமீஷ் ஹார்டிங், பிரான்ஸ் கடற்படை முன்னாள் கமாண்டோ பால்-ஹென்றி நார்கியோலே ஆகியோரும் மரணமடைந்தனர்.

இதில் பால்-ஹென்றி நார்கியோலே, டைட்டானிக் நிறுவனம் சார்பில் செயல்பட்டு, மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலில் இருந்து சுமார் 5,000 பொக்கிஷங்களை மீட்க உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.