புகைப்பிடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு!! -லியோ பாடலில் மாற்றம் செய்த படக்குழு-

ஆசிரியர் - Editor II
புகைப்பிடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு!! -லியோ பாடலில் மாற்றம் செய்த படக்குழு-

தளபதி விஜய் நடிக்கும் ’லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள ’நான் ரெடி’ பாடலில் புகைபிடிப்பது போன்ற காட்சிக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளதை அடித்து படக்குழு அப்பாடலில் ஒரு சிறிய மாற்றம் செய்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா நடித்து வரும் லியோ படத்தின் முதல் பாடலான `நா ரெடி' பாடல், தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அண்மையில் வெளியானது. 

இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இப்பாடலில் தளபதி விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் உள்ளதால், சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம், இந்தப் பாடலுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரிடம் இணையம் வாயிலாக புகார் மனு அளித்தார். அதில், ‘போதைப் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும்,

இந்த சூழலில் ’நான் ரெடி’ பாடலில் ‘லியோ’ படக்குழு ஒரு சிறிய மாற்றத்தை செய்துள்ளது. யூ.டி.யூபில் இருக்கும் இப்பாடலில் புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும் இடங்களில் ‘புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும். உயிரைக் கொல்லும்’ என்ற வாசகம் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு