நிதி வசூலித்த ஆசிரியர்கள் தொடர்பில் ஊடகங்களின் வெளியான செய்தியால் ஆசிரியர் ஒருவரின் 2 மாத சம்பளத்தை பிடித்து வைத்த வலயக் கல்வி பணிப்பாளர்..
தனது இரு மாத சம்பளத்தை தடுத்து வைத்துள்ள முல்லத்தீவு வலயைக் கல்விப் பணிப்பாளரிடம் இருந்து சம்பளத்தை பெற்றுத் தருமாறுகோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் ஆசிரியர் ஒருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதாவது, மாகாணக் கல்விப்பணிப்பாளரின் NP/20/ET/F/Co.Tr இலக்க கடிதத்திற்கு அமைவாக முல்லைத்தீவு விசுவமடு மகாவித்தியாலயத்தை நிரந்தரப் பாடசாலையாகவும்,
யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரியை தற்காலிக பாடசாலையாகவும் கொண்டு நான் ஏப்ரல் மாதம் 28ம் திகதி முதல் யா/ மகாஜனக் கல்லூரியில் பணிபுரிந்து வருகின்றேன்.
எனக்கு முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளரால் வைகாசி மற்றும் ஆனி மாத கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.
இப்பொருளாதார கஷ்டமான நிலமையில் வலயக்கல்விப் பணிப்பாளரின் மேற்குறித்த செயற்பாடானது எனக்கெதிரான திட்டமிட்ட பழிவாங்குதலாகவே கருதுகின்றேன்.
கடந்த 2022ஆம் ஆண்டு 22ஆம் நான் ஐப்பசி மாதம் அளவில் சிறப்பிக்கப்பட்ட முன்னாள் அதிபரின் மணிவிழா தொடர்பாக எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் முறையற்ற விதத்தில் நிதி திரட்டி விடயம் ஊடகங்களில் வெளிவந்தன.
குறித்த முறைகேடு தொடர்பில் தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாகக் கேள்விகளை தொடுத்திருந்த நிலையில் எனக்கு எதிரான செயற்பாடுகளை வலையக் கல்விப் பணிப்பாளர் மேற்கொண்டு வந்தார்.
ED/01/12/09/05401 இன் சரத்து 01 இன் படிக்கு ஆசிரியர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபடுவது தவறு எனவும் சரத்து 02 இன் படிக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் நான் தற்காலிக பணியிட மாற்றம் பெற்று யாழ்ப்பாணம் வந்த நிலையில் எனது இரு மாதக் கொடுப்பனவுகளை திட்டமிட்ட முறையில் இழுத்தடிப்பு செய்கிறார்.
ஆகவே எனது உழைப்புக்கான ஊதியத்தை வழங்காது நொண்டிச்சாட்டுகளை கூறிவரும் வலயக் கல்விப் பணிப்பாளரிடமிருந்து எனது சம்பளத்தை பெறுவதற்கு ஆவணை செய்யுமாறு ஆசிரியர் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.