ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்த கமல்!!

ஆசிரியர் - Editor II
ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்த கமல்!!

வேலை இழந்த கோயம்புத்தூரை சேர்ந்த முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரது மகள் ஷர்மிளா,  சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார் மகேஷ்.

சிறுவயது முதலே தந்தையின் வேலையை பார்த்து பழகிய ஷர்மிளாவுக்கு, வாகனங்கள் இயக்க வேண்டும் என்பதில் ஆர்வம் இருந்தது.

இதற்காக ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் தனியார் நிறுவனம் வழங்கிய வாய்ப்பை பயன்படுத்தி பேருந்தை இயக்கினார், கோவையின் முதல் பெண் ஓட்டுநர் என பலரது பாராட்டுகளையும் பெற்றார்.

தி.மு.க எம்.பி கனிமொழி பயணம் செய்த தினத்தன்று, நடந்துனருடன் ஏற்பட்ட தகராறால் வேலையை இழந்தார் ஷர்மிளா.

இந்நிலையில் வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா தொடரும் வகையில் நடிகர் கமல்ஹாசன் ஷர்மிளாவுக்கு கார் பரிசளிப்பதாக அறிவித்துள்ளார்.

அதன்படி கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்கியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு