SuperTopAds

இந்தியாவில் 82,000 கோடி முதலீடு செய்யும் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் 82,000 கோடி முதலீடு செய்யும் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை

அமெரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-

அமெரிக்க பயணத்தின் போது பிரதமரை சந்தித்தது பெருமைக்குரிய ஒன்றாகும்.

கடந்த டிசெம்பரில் இருவரும் சந்தித்தோம், தற்போது அதுதொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்தது, இந்தியாவுக்காக எண்மயமாக்கல் நிதியின் கீழ் 10 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வது வருவது குறித்து பிரதமரிடம் தெரிவித்தேன்.

குஜராத்தில் கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய நிதிசார் செயல்பாட்டு மையம் திறக்கப்படவுள்ளது, இது இந்தியா, அமெரிக்கா மட்டுமின்றி உலகளாவில் சிறிய, பெரிய வணிகங்களுக்கு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த 7 வருடங்களில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் 1.23 இலட்சம் கோடியை முதலீடு செய்யும் என தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி அறிவித்துள்ளதுடன்,

2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஒரு கோடி சிறுவணிகங்களை டிஜிட்டல்மயமாக்கவும், 20 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக குறிப்பிடத்துள்ளது நினைக்கூரத்தக்கது.