பூநகரி - கெளதாரிமுனை காற்றாலை திட்டம், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இழுத்தடிக்க முடியாது! டக்ளஸ் திட்டவட்டம்..

ஆசிரியர் - Editor I
பூநகரி - கெளதாரிமுனை காற்றாலை திட்டம், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இழுத்தடிக்க முடியாது! டக்ளஸ் திட்டவட்டம்..

பூநகரி - கௌதாரிமுனை காற்றாலை திட்டத்தின் ஊடாக எமது மக்களுக்கும் நாட்டிற்கும் எவ்வாறான நன்மைகளை கூடியளவு விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதிலேயே தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 

குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் கால இழுத்தடிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களிலும், இன்றைய சந்திப்பிலும் மக்கள் பிரதிநிதிகளினாலும் அதிகாரிகளினாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் - ஆலோசனைகள் மற்றும் வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை தெளிவான முறையில் அடையாளப்படுத்தி, 

அவை நடைமுறைப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கெளதாரிமுனை காற்றாலை திட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பான விடேச கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றின் முதலீட்டில் பூநகரி - கௌதாரிமுனையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலைத் திட்டத்தின் காரணமாக கௌதாரிமுனை பிரதேசத்தினை சேர்ந்த மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகவும் 

ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்கள் கிடைக்கவுள்ளதுடன், அடிப்படை, சமூக மற்றும் வாழ்வாதார நன்மைகளையும் ஏற்படுத்துவதற்கு இந்திய முதலீட்டாளர்களினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கௌதாரிமுனை கிராமத்திற்கான சுமார் 17 கிலோமீற்றர் வீதியை காபபெற் வீதியாக அமைக்கப்படவுள்ளதுடன், சுமார் 40 கிலோமீற்றர் நீளமான உள்ளக வீதிகளும் உருவாக்கப்படவுள்ளன.

அதேபோன்று, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களையும் மேற்கொள்வதற்கு முதலீட்டாளர்களினால் உத்தவரவாதம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு