நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை...

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை...

இன்று (07) காலை கொழும்பல் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

மருதங்கேணி மற்றும் ஜெயபுரம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இன்று (07) காலை பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுடன் ஏற்பட்ட தகராறு தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று (06) உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு