பெட்டிகளைப் போல இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது!!க -கவிஞர் வைரமுத்து வேதனை-

ஆசிரியர் - Editor II
பெட்டிகளைப் போல இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது!!க -கவிஞர் வைரமுத்து வேதனை-

இந்தியாவின் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 

அதில், இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல் மீட்புப் பணியாளர்க்குத் தலைதாழ்ந்த வணக்கம் இருந்த இடத்தில் எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன் கண்ணீர் கன்னம் தாண்டுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு