சிதைந்து போன உடல்கள்; ரத்த கறையில் தண்டவாளங்கள்!! -பதற வைக்கும் ரயில் விபத்துக்களம்-

ஆசிரியர் - Editor II
சிதைந்து போன உடல்கள்; ரத்த கறையில் தண்டவாளங்கள்!! -பதற வைக்கும் ரயில் விபத்துக்களம்-

ஒடிசா - பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 233க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், ஒடிஷா ரயில் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பயணி அனுபவ தாஸ் என்பவர் தான் எதிர்கொண்ட திகில் அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பான பதிவில் அவர்;-

ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று மாலை ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு, அருகில் லூப் டிராக்கில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியது. பின்னர், பெங்களூரு - ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. 

ஹவுராவில் இருந்து சென்னை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்த நான், காயமின்றி தப்பியதற்கு கடவுளுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 

இது மிகப்பெரிய ரயில் விபத்து. பெங்களூரு - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸின் மூன்று பொது பெட்டிகள் முற்றிலும் தடம் புரண்டு சேதமடைந்துள்ளன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சுமார் 13 பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. 

விபத்தில் சிக்கி குடும்பங்கள் சுக்கு நூறாக நொறுங்கின. எங்கேயும் கைகால்கள் இல்லாத சிதைந்த உடல்கள் சிதறிக்கிடந்தன. ரயில் தண்டவாளங்கள் எங்கும் ரத்தக்களமாக காட்சியளித்தன என்று குறிப்பிட்டிருந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு