SuperTopAds

தல டோனிக்கு வெற்றியை சமர்பிக்கிறோம்!! -இது அவருக்கான கிண்ணம் என்கிறார் ஜடேஜா-

ஆசிரியர் - Editor II
தல டோனிக்கு வெற்றியை சமர்பிக்கிறோம்!! -இது அவருக்கான கிண்ணம் என்கிறார் ஜடேஜா-

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் நேற்று குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடந்தன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 

இந்நிலையில் வெற்றிக்கு பின் பேசிய ஜடேஜா கூறியதாவது:- 

எனது சொந்த ஊரில் சொந்த மக்கள் முன்னிலையில் சென்னை அணிக்காக 5 ஆவது முறை கோப்பையை வெல்வது மகிழ்ச்சியாக உள்ளது. இது அற்புதமான உணர்வு. உண்மையில் இங்கு எங்களுக்கான ஆதரவு ஆச்சர்யத்தை கொடுத்தது. தாமதமான இரவிலும் மழை நிற்கும்வரை ரசிகர்கள் காத்திருந்தனர். 

சி.எஸ்.கே ரசிகர்களுக்கு பெரிய வாழ்த்துக்களை சொல்ல வேண்டும். இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான டோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். 

இறுதி நேரத்தில் எதுவாக இருந்தாலும் நான் கடினமாக ஆட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். மோஹித் ஸ்லோ பால் அதிகம் வீசக்கூடியவர் என்பதால் நேராக அடிக்க நினைத்தேன். 

அப்படியே செய்தேன். இந்த வெற்றி தருணத்தில் சி.எஸ்.கே.வின் ஒவ்வொரு ரசிகருக்கும் வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன் என்றார்.