SuperTopAds

இறுதிப் போட்டியில் பல சாதனைகள் படைத்த தமிழ் இளைஞர் சாய் சுதர்சன்

ஆசிரியர் - Editor II
இறுதிப் போட்டியில் பல சாதனைகள் படைத்த தமிழ் இளைஞர் சாய் சுதர்சன்

குஜராத் டைட்டன்ஸ் - சி.எஸ்.கே அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் சென்னை அணியின் தலைவர் எம். எஸ் டோனி. அவர் நினைத்தவாறு பந்துவீச்சு அமையாத காரணத்தினால் குஜராத் அணி 20 பந்துப் பரிமாற்றங்களில் 4 இலக்குகளை மட்டுமே இழந்து 214 ஓட்டங்களை குவித்தது. 

சுப்மான் கில்தான் அதிகமாக ஓட்டங்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 47 பந்தில் 96 ஓட்டங்கள் குவித்தார். 

இதன் மூலம் பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ளார் சாய் சுதர்சன். ஐ.பி.எல் போட்டியில் மிக இளம் வயதில் 50 ஓடங்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு முன் 20 வயது 318 நாட்களில் மனன் வோரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். சாய் சுதர்சன் இன்றைய ஆட்டத்தின் மூலம் 21 வயது 226 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார். 

சுப்மான் கில் 22 வயது 37 நாட்களிலும் ரிஷப் பண்ட் 23 வயது 37 நாட்களிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர். ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். வாட்சன் 2018 ஆம் ஆண்டு ஆட்டம் இழக்காமல் 117 ஓட்டங்களை அடித்து முதல் இடத்தில் உள்ளார்.