அல்மனாரீயன் 89 ஆண்டு உயர்தர பழைய நண்பர்கள் அமைப்பின் ஒன்று கூடலும் மேலங்கி அங்குரார்ப்பண நிகழ்வும்
மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பான அல்மனாரீயன் 89 ஆண்டு உயர்தர பழைய நண்பர்கள் அமைப்பின் ஒன்று கூடலும் மேலங்கி அங்குரார்ப்பண நிகழ்வும் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் புதன்கிழமை(24) இரவு இடம்பெற்றது
நிகழ்வின் ஆரம்பத்தில் தேசிய கீதம் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு கிராஅத் ஓதலுடன் வரவேற்புரை உட்பட குறித்த ஆண்டின் பழைய மாணவர்களாக உயர்தர கல்வி கற்றவர்கள் கலந்து கொண்டு பாடல்கள் நகைச்சுவை கலந்த உரைகளை மேற்கொண்டு பழைய நினைவலைகளை மீட்டனர்.
அத்துடன் குறித்த பழைய மாணவர் அணியில் கல்வி கற்று மரணமடைந்த றமீஸ் ஹரீஸ் றிஸ்வி உள்ளிட்ட மூவருக்கும் சுய பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் 89 ஆண்டு இலச்சினை பதிக்கப்பட்ட மேலங்கி(ரீ-சேட்கள்) காட்சிப்படுத்தப்பட்டு வெளியீட்டு வைக்கப்பட்டது. இதில் குறித்த 89 ஆண்டில் உயர்தர மாணவர்களாக கல்வி கற்று தற்போது பல்வேறு துறைகளில் அதிகாரிகளாகவும் தொழிலதிபர்களாகவும் உள்ள பிரபலமான நபர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.டு
மேலும் இப்பழைய மாணவர் அமைப்பானது எதிர்காலத்தில் பல்வேறு உதவிகளை பாடசாலைகளுக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தள்ளது.
மேற்படி நிகழ்வுக்கு மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பான அல்மனாரீயன் 89 ஆண்டு உயர்தர பழைய நண்பர்கள் அமைப்பின்
அங்கத்தவர்களான கல்முனை ஆதார வைத்திய சாலை சத்திரசிகிச்சை நிபுணர் ஏ. டபிள்யூ. எம். சமீம் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி றைசுல் ஹாதி கல்முனை வலயக்கல்வி அலுவலக கணக்காளர் வை .ஹபீபுல்லாஹ் மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலை அதிபர் இப்றாலெவ்வை உபைதுல்லா தென்கிழக்கு பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானப் பிரிவின் தலைவர் சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.எம் றியாஸ் அகமட் சமூர்த்தி முகாமையாளர் எம்.ஐ.எம் முஸீப் உட்பட ஏனைய துறை சார்ந்தவர்கள் வர்த்தக தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட டீ சேட்டுக்களை பழைய மாணவர்கள் சகலரும் அணிந்துகொண்டு குழுப்புகைப்படம் எடுத்ததுடன் இரவு போசனத்துடன் இனிதே நிகழ்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.